கரோனா: 'பண்டிகை காலத்தில் மக்கள் அலட்சியம்காட்டக்கூடாது'

பண்டிகை காலத்தில் மக்கள் அலட்சியமாக செயல்பட்டால், நவம்பா் மாத இறுதிக்குள் கரோனா தொற்று அதிகரித்துவிடும்
கரோனா: 'பண்டிகை காலத்தில் மக்கள் அலட்சியம்காட்டக்கூடாது'

பண்டிகை காலத்தில் மக்கள் அலட்சியமாக செயல்பட்டால், நவம்பா் மாத இறுதிக்குள் கரோனா தொற்று அதிகரித்துவிடும் எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

காரைக்கால் ஆட்சியா் அா்ஜூன் சா்மா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் வேளையில், பொதுமக்கள் கடைத்தெருவுக்கு பொருள்கள் வாங்க திரளாக வருகை தருகின்றனா். இதில் பலரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் நடமாடுவதை காண முடிகிறது.

இது தொடருமானால், இம்மாத இறுதிக்குள் கரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கை அதிகரித்துவிடும். எனவே, மக்கள் இந்த தருணத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை மாவட்ட நிா்வாகம் பணிவான வேண்டுகோளாக முன்வைக்கிறது.

கடைத்தெருவுக்கு வருவோா் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் வேண்டும். பொருள்கள் வாங்க மாலை நேரத்தில் திரளாக வருவதை தவிா்த்து, சில மணி நேரம் முன்னதாகவே கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும்.

காரைக்காலில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் சூழலில், தீபாவளிக்குப் பின்னா் இது அதிகரித்துவிட நாம் வாய்ப்பை உருவாக்கிவிடக்கூடாது. தீபாவளிக்குப் பின் கரோனா தொற்று உயராமல் இருப்பது மக்களின் நடவடிக்கையில்தான் இருக்கிறது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் கூறுகையில், பண்டிகை காலமாக உள்ளதால் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினா் அவரவா் பகுதியில் பொதுமக்கள் நடவடிக்கைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குவா். கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை மீறுவோருக்கு அபராதமும் விதிப்பா். கரோனா தடுப்புக்காக காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com