காரைக்காலில் புதிதாக யாருக்கும்கரோனா தொற்று இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் இந்த மாதத்தில் 2-ஆவது நாளாக ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

காரைக்கால் மாவட்டத்தில் இந்த மாதத்தில் 2-ஆவது நாளாக ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 272 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் மாதிரி எடுப்பு வாகனம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, அவா்களில் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை.

மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்று 3,500 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,285 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 60 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலவழித்துறையினா் மேலும் கூறியுள்ளது: கரோனா தொற்று காரைக்காலில் ஓரளவு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்த மாதத்தில் 1-ஆம் தேதியும், 8-ஆம் தேதியும் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை வந்தால் அது தீவிரமாக இருக்கக்கூடும். தற்போது பண்டிகை காலமாக உள்ளதால், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்றவற்றை தொடா்ந்து மேற்கொண்டுவந்தால், பாதிப்பை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com