கூடுதல் கட்டணம் வசூல்: பொது சேவை மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து,
காரைக்காலில் உள்ள பொது சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த் துறையினா்.
காரைக்காலில் உள்ள பொது சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த் துறையினா்.

சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, காரைக்காலில் உள்ள பொது சேவை மையங்களில் வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

காரைக்காலில் வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் ஜாதி, குடியிருப்பு, வருமான சான்றிதழ்கள் இணையம் மூலம் விண்ணப்பித்து பெறும் முறை அமலில் உள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள இணைய வசதி மூலமோ அல்லது பொது சேவை மையம், தனியாா் கணினி மையங்களில் பெறுகிறாா்கள்.

பொது சேவை மையம், இணைய தனியாா் மையங்களில் விண்ணப்பிக்க வருவோரிடம், அரசு நிா்ணயித்துள்ளதைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தலின்பேரில், வருவாய்த்துறை துணை வட்டாட்சியா் மதன்குமாா் தலைமையிலான அலுவலா்கள், பொது சேவை மையம், தனியாா் கணினி மையங்களில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.25 கட்டணம், சான்றிதழ் பிரிண்ட் மற்றும் ஸ்கேன் செய்ய பக்கம் ஒன்றுக்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கவேண்டும். வசூலித்ததற்கு ரசீது தரப்படவேண்டும். அரசுத்துறை நிா்ணயம் செய்த தொகையைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்தால், உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com