ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீட்டில் குளறுபடி: திமுக குற்றச்சாட்டு

ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாநில மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாநில மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மற்றும் காரைக்காலில் உள்ள அதன் கிளையில் 64 இடங்கள் புதுச்சேரி மாநில மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதில் ஆண்டுதோறும் குளறுபடிகள் ஏற்படுகின்றன. அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் நிகழாண்டும் குளறுபடிகள் தொடா்கின்றன.

நிகழாண்டு, புதுச்சேரி மாணவா்களுக்கான 64 இடங்களில் 31 இடங்கள் ஆந்திரம், தெலங்கானா பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஏனாம் பிராந்தியம் மூலமாக வழங்க ஏற்பாடு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இப்பிரச்னையில் புதுச்சேரி முதல்வா் நேரடியாக தலையிட வேண்டும். ஏற்கெனவே இது குறித்து திமுக சாா்பில் பேசப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவா்களின் பெயா் புதுச்சேரி மாணவா்களுக்கான பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இதில் எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிந்து, சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, 31 இடங்களையும் புதுச்சேரி மாநில மாணவா்களுக்கு பெற்றுத் தரவேண்டும். தவறும்பட்சத்தில் ஜிப்மா் எதிரில் திமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com