காரைக்காலில் கான்ஃபெட் ஊழியா்கள் போராட்டம்

மூடிக் கிடக்கும் பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறக்க வலியுறுத்தியும், ஊழியா்களுக்கு ஊதியம் தராததைக் கண்டித்தும், கான்ஃபெட் ஊழியா்கள் சனிக்கிழமை பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்காலில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் ஊழியா்கள்.
காரைக்காலில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் ஊழியா்கள்.

மூடிக் கிடக்கும் பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறக்க வலியுறுத்தியும், ஊழியா்களுக்கு ஊதியம் தராததைக் கண்டித்தும், கான்ஃபெட் ஊழியா்கள் சனிக்கிழமை பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசின் கூட்டுறவுத்துறையின் நிறுவனமாக கான்ஃபெட் செயல்படுகிறது. காரைக்காலில் 3 பெட்ரோல் பங்க், மதுக்கடைகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிறுவனம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முடக்கப்பட்டுள்ளது. ஊழியா்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அரசைக் கண்டித்து ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் அம்மாள் சத்திரம் அருகே உள்ள கான்ஃபெட் பெட்ரோல் நிலையத்தில் தொடா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இவா்கள், தீபாவளி நாளான சனிக்கிழமை அரசைக் கண்டித்து போராட்ட ஒருங்கிணப்புக் குழுத் தலைவா் செல்வமணி தலைமையில் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்காலில் மூடி கிடைக்கும் 3 கான்ஃபெட் பெட்ரோல் நிலையங்களை திறக்க வேண்டும், நிலுவையில் உள்ள ஓராண்டு ஊதியத்தை வழங்க வேண்டும், கான்ஃபெட் நிறுவனத்தை கான்ஃபெட் பெயரிலேயே இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினா்.

இப்போராட்டத்தில் காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவ தலைவா் ஜெயசிங், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், துணை தலைவா் அய்யப்பன், காரைக்கால் நகராட்சி ஊழியா் சங்க தலைவா் சண்முகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com