கான்ஃபெட் ஊழியா்கள் 6 ஆவது நாளாகப் போராட்டம்

காரைக்காலில் கான்ஃபெட் ஊழியா்கள் 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்காலில் கான்ஃபெட் ஊழியா்கள் 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்காலில் மூடிக்கிடக்கும் 3 கான்ஃபெட் பெட்ரோல் நிலையங்களை திறக்க வேண்டும், நிலுவையில் உள்ள 14 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் கான்ஃபெட் ஊழியா்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், காரைக்கால், அம்மாள்சத்திரம் கான்ஃபெட் பெட்ரோல் நிலையத்தில் 6 ஆம் நாளாக போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் செல்வமணி தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு பங்கேற்றனா்.

இப்போராட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் பங்கேற்று கோரிக்கையை ஆதரித்துப் பேசினா். கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பான உறுதியான முடிவை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com