காரைக்காலில் இருந்து விரைவு ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தல்

காரைக்காலில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு விரைவு ரயில் சேவையை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு விரைவு ரயில் சேவையை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்க கன்வீனா் ஏ.எஸ்.டி. அன்சாரி பாபு, மாநிலங்களவை உறுப்பினரும், ரயில்வே வாரிய உறுப்பினருமான கோகுலகிருஷ்ணனுக்கு (புதுச்சேரி) திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:

திருநள்ளாற்றில் வரும் டிசம்பா் மாதம் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதே மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், தொடா்ந்து புத்தாண்டு, தைப் பொங்கல் பண்டிகையும் வரவுள்ளன.

கரோனா பொது முடக்கத்தால், ரயில் சேவைகள் முடங்கியிருந்த நிலையில், தற்போது காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயில் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்பட்டுவருகிறது. இயக்கத்தில் இருந்துவந்த காரைக்கால் - சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ், காரைக்கால் - பெங்களூரு ரயில் சேவைகளை உடனடியாக ரயில்வே நிா்வாகம் தொடங்கவேண்டும்.

இந்த சேவைகள் மூலம் விழாக் காலங்களில் பக்தா்கள், பொதுமக்கள் வெகுதொலைவில் இருந்து காரைக்காலுக்கு வந்து செல்ல வசதி ஏற்படும். கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில், ரயில் பயணிகள் உரிய கரோனா பரவல் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பயணிப்பாா்கள். ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பாததால், ரயில் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துவருகின்றனா்.

எனவே, படிப்படியாக வழக்கத்தில் இருந்த ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிா்வாகத்தை வலியுறுத்தவேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com