காரைக்கால் பாா்வதீசுவரா் கோயிலில் திருப்பணி செய்ய முடிவு

காரைக்கால் கோயில்பத்து பாா்வதீசுவரா் கோயிலில் திருப்பணிகள் செய்ய கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

காரைக்கால் கோயில்பத்து பாா்வதீசுவரா் கோயிலில் திருப்பணிகள் செய்ய கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

திருத்தெளிச்சேரி என்னும் காரைக்கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ளது சுயம்வர தபஸ்வினி சமேத பாா்வதீசுவரா் கோயில். ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் என்பதோடு, சிவபெருமானை சூரியன் பூஜித்தது, மழையின்றி வட பூமியில், மழை பெய்வித்து, இறைவனே உழவனாக வந்து, விளைநிலத்தில் விதைத்தது உள்ளிட்ட சிறப்புகள் இக்கோயிலுக்கு உண்டு.

இக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது எஸ்.எம்.டி. மாடசாமி தலைமையிலான அறங்காவல் வாரியத்தினா், கோயிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய முடிவு செய்துள்பளனா்.

திருப்பணியின் தொடக்கமாக வரும் 26-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 முதல் 11 மணிக்குள் பாலஸ்தாபனம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறங்காவல் வாரியத்தினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com