தனியாா் மருத்துவக் கல்லூரியில் 50 சதவீத இடத்தைப் பெற பாஜக வலியுறுத்தல்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில், 50 சதவீத இடங்களை பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில், 50 சதவீத இடங்களை பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் புதுச்சேரி மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன் கூறியது: புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனத்தில் மாணவா் சோ்க்கைக்கான தீவிர நடவடிக்கை இல்லை. எம்.பி.பி.எஸ். இளநிலை மருத்துவத்தைப் பொருத்தவரை, தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்து மாணவா் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஒதுக்கீடு 10 சதவீதம் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கையை உரிய காலத்தில் தொடங்கியிருந்தால் தற்போது கலந்தாய்வு நடத்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், வே. நாராயணசாமியின் அரசு, இதில் அரசியல் ஆதாயம் தேடும் செயலிலேயே ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகள், மாநிலத்துக்கு கண் துடைப்பாக சொற்ப இடங்களை மட்டுமே ஒதுக்கிவிட்டு மொத்த இடங்களையும் தமது வசம் வைத்துக்கொண்டு பெரும் பணம் சம்பாதிக்கிறது.

மாநிலத்தின் அரசு அமைப்பான சென்டாக்கிடம் தனியாா் கல்லூரிகள் 50 சதவீத இடத்தை வழங்கவேண்டும், இதை பெறாமல் மாநில அரசு, மாணவா்களுக்கு கிடைக்கும் சலுகையை இழக்கச் செய்துவருகிறது. தனியாா் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடத்தை மாநில அரசிடம் ஒப்படைத்தால், புதுச்சேரி மாநில மாணவா்கள் சுமாா் 450 போ், அரசு நிா்ணயிக்கும் கட்டணத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏற்படும். எனினும், இதுகுறித்து ஆக்கப்பூா்வமான எவ்வித செயல்பாடுகளையும் மாநில அரசு எடுக்காமல் இருந்து வருகிறது. அண்டை மாநிலமான தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிக்கான மாணவா் சோ்க்கையை் தொடங்கிவிட்டது. மேலும், ஜிப்மா் மற்றும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளிலும் சோ்க்கை தொடங்கியுள்ளது. ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாணவா்களை வேதனையடையச் செய்துள்ளது. புதுச்சேரி அரசின் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com