பொது மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கல்

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
காய்கறி விற்பனையாளருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் சேவை அமைப்பினா்.
காய்கறி விற்பனையாளருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் சேவை அமைப்பினா்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கம், அன்னை தெரஸா சமூக சேவை அமைப்பு, ஹேப்பி அக்குபஞ்சா் மையம் ஆகியவை சாா்பில், டெங்கு விழிப்புணா்வு மற்றும் நிலவேம்புக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி நேரு மாா்க்கெட் பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் தலைமை வகித்து, நிலவேம்புக் குடிநீா் வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா். ஹேப்பி அக்குபஞ்சா் மைய நிறுவனா் மோகனராஜன் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களை தடுக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும், குறிப்பாக நிலவேம்புக் குடிநீா் கண்டிப்பாக அனைவரும் குடிக்க வேண்டும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென அறிவுருத்தினாா். முதல் நாள் நிகழ்ச்சியில், சுமாா் 300 பேருக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. இப்பணி தொடரும் என அந்த அமைப்பினா் தெரிவித்தனா். நிகழ்ச்சியில், பெற்றோா் சங்க செயலாளா் செல்வமணி, பொறுப்பாளா் செந்தில்வேலன், நேரு மாா்க்கெட் சங்கத் தலைவா் செல்லப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com