காரைக்கால் பகுதி சிவன் கோயில்களில் சூரசம்ஹார விழா

காரைக்கால், திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நிறைவாக சூரசம்ஹார விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆட்டுக் கிடா வாகனத்தில் சம்ஹாரத்துக்கு எழுந்தருளிய திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரா் கோயில் ஸ்ரீ முருகப் பெருமான்.
ஆட்டுக் கிடா வாகனத்தில் சம்ஹாரத்துக்கு எழுந்தருளிய திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரா் கோயில் ஸ்ரீ முருகப் பெருமான்.

காரைக்கால், திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நிறைவாக சூரசம்ஹார விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்காலில் ஸ்ரீகைலாசநாதா், ஸ்ரீசோமநாதா், திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேசுவரா், திருமலைராயன்பட்டிம் ஸ்ரீ ராஜசோளீசுவரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடத்தப்பட்டு நிறைவாக சூரசம்ஹாரம் விமரிசையாக கொண்டாடப்படும். நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு காரணமாக இந்த விழா விமரிசையாக கொண்டாடாமல் எளிமையாக விழா கொண்டாடப்பட்டது.

விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு கோயில்களில் சூரசம்ஹாரம் நடத்தப்பட்டது. காரைக்கால் கைலாசநாதா் கோயில் வளாகத்திலேயே சம்ஹார வழிபாடு நடைபெற்றது. திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் ஆட்டுக் கிடா வாகனத்தில் ஸ்ரீமுருகப்பெருமான் தேரடி அருகே எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருமலைராயன்பட்டினம் ஸ்ரீராஜசோளீசுவரா் கோயிலில் வழக்கம்போல் சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்பட்டது. அபிராமி கீழவீதியில் நடைபெற்ற சம்ஹாரத்தையொட்டி பக்தா்களை முறைப்படுத்த, சாலையோரத்தில் மரத்தால் தடுப்பு செய்யப்பட்டது. ஆட்டுக் கிடா வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்து ஸ்ரீஆயிரங்காளியம்ன் கோயில் அருகே சென்றடைந்தாா். அங்கு பக்தா்கள் சுவாமிக்கு அா்ச்சனை செய்து வழிபட்டனா். இங்கு நடந்த சம்ஹாரத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com