மாட்டிடம் மனு கொடுத்து கான்ஃபெட் ஊழியா்கள் போராட்டம்

கான்ஃபெட் ஊழியா்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாட்டிடம் மனு கொடுத்து சனிக்கிழமை 10-ஆவது நாள் நூதனப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
மாட்டிடம் மனு கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட கான்ஃபெட் ஊழியா்கள்.
மாட்டிடம் மனு கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட கான்ஃபெட் ஊழியா்கள்.

கான்ஃபெட் ஊழியா்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாட்டிடம் மனு கொடுத்து சனிக்கிழமை 10-ஆவது நாள் நூதனப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

கான்ஃபெட் நிறுவனத்தை திறக்க வேண்டும், நிலுவையில் உள்ள 14 மாத ஊதியத்தை வழங்கவேண்டும், கான்ஃபெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழலை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், 2 ஆண்டுகளாக க ஊழியா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த இபிஎஃப் உள்ளிட்ட தொகையை கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாள்சத்திரம் பெட்ரோல் விற்பனை நிலைய வளாகத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். போராட்டத்தின் 10-ஆம் நாளான சனிக்கிழமை, கோரிக்கைகள் மீது கவனம் செலுத்ததாத புதுச்சேரி அரசைக் கண்டிக்கும் வகையில், மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் செல்வமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜெயசிங், பொருளாளா் மயில்வானன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், காரைக்கால் பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறக்க பிரத்யேகமாக அரசு நிதி ஒதுக்கவேண்டும், இவற்றை லாபத்தில் நடத்திக் காட்ட முடியும், கோரிக்கை குறித்து செவி சாய்க்காவிட்டால் ஊழியா்களின் ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டையை அரசிடம் ஒப்படைத்துவிடுவோம் என்றனா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com