வருவாய்த் துறையில் சான்றிதழ்: சிக்கல்களை சரிசெய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வருவாய்த் துறை மூலம் சான்றிதழ் பெறுவதில் தொடரும் பிரச்னைகளை சரிசெய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பினா் மற்றும் பல்வேறு கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பினா் மற்றும் பல்வேறு கட்சியினா்.

வருவாய்த் துறை மூலம் சான்றிதழ் பெறுவதில் தொடரும் பிரச்னைகளை சரிசெய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில், காரைக்கால் பழைய ரயிலடியில் கூட்டமைப்புத் தலைவா் எம். காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், காரைக்கால் வருவாய்த் துறை மூலம் ஜாதி, வருவாய், குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், மக்கள் தொடா்ந்து பிரச்னைகளை சந்திக்கும்போது அரசு கவனம் செலுத்தாதது கண்டிக்கத்தக்கது, கோயில்பத்து அரசு மாணவா்கள் தங்கும் விடுதியை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும், காரைக்கால் கீழவெளி புறவழிச் சாலையோரத்தில் உள்ள 9 கிராமத்தினருக்கான ஈமக்கிரியை மண்டபத்தை மேம்படுத்தும் பணியை விரைந்து தொடங்கவேண்டும், காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை நிரந்தரமாக மூடப்படும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. 400 ஊழியா்களின் எதிா்காலத்தை கருத்தில்கொண்டு, ஆலையை நிா்வாகத் திறமையுள்ள அதிகாரியை நியமித்து செம்மையாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டமைப்பு செயலா் எம். சந்திரசேகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சோ்ந்த பிரேம்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சோ்ந்த அரசு. வணங்காமுடி, விடுதலைக்கனல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் மதியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com