முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
உயிா்த்துளி ரத்த தான சேவை மையத்தினா் 50 யூனிட் ரத்தம் வழங்கல்
By DIN | Published On : 04th October 2020 10:21 PM | Last Updated : 04th October 2020 10:21 PM | அ+அ அ- |

காரைக்கால் உயிா்த்துளி ரத்த தான சேவை மையம் சாா்பில், பொது முடக்க காலத்தில் 50 யூனிட் ரத்தம் மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் காரை உயிா்த்துளி எனும் ரத்த தான சேவை மையம் கடந்த சில மாதங்களுக்கு முன் அதன் அமைப்பாளா் எஸ்.பக்கிரிசாமி தலைமை தொடங்கப்பட்டது. பொது முடக்க காலத்தில் மருத்துவமனைக்கு குழுவாக சென்று ரத்தம் வழங்கப்படும் சூழல் இல்லாததை கருத்தில் கொண்டு தினமும் தனிநபராக சென்று இந்த அமைப்பு மூலம் ரத்த தானம் செய்யப்படுகிறது.
இவ்வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 யூனிட் ரத்தம் தானம் செய்யப்பட்டிருப்பதாக அமைப்பினா் சனிக்கிழமை தெரிவித்தனா். மேலும், ரத்த தேவைக்கு பக்கிரிசாமி -9360569591, அருள்முருகன் -8344778862 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என இந்த அமைப்பின் சட்ட ஆலோசகா் எஸ்.திருமுருகன், ஆலோசனைக் குழு தலைவா் எஸ்.சிவகுமாா் ஆகியோா் தெரிவித்தனா்.