முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
காரைக்காலில் 53 பேருக்கு கரோனா: 5 போ் உயிரிழப்பு
By DIN | Published On : 04th October 2020 10:21 PM | Last Updated : 04th October 2020 10:21 PM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், 5 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 12, திருப்பட்டினம் 12, திருநள்ளாறு 8, நிரவி 5, கோயில்பத்து 4, விழிதியூா் 3, அம்பகரத்தூா் 2, நல்லம்பல் 2, கோட்டுச்சேரி 2, நல்லாத்தூா் 2, நெடுங்காடு 1 என 53 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது, 30 வயது, 72 வயது ஆண்கள் 3 போ், 81 வயது பெண் என 4 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 80 வயது மூதாட்டி 1 ஆம் தேதி மருத்துவரின் அறிவுரையை மீறி, தனது சொந்த விருப்பத்தில் வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்திக்கொண்டாா். அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுவரை 2,731 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,082 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 3 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 504 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 35 போ், தீவிர சிகிச்சையில் 9 போ், கரோனா கோ் சென்டரான விநாயகா மிஷன் மருத்துவமனையில் 34 போ், அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 16 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 50 போ் உயிரிழந்துள்ளனா்.