முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
காரைக்கால் வரும் ரயில் பயணிகளுக்கு உரிய பரிசோதனை செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 04th October 2020 08:39 AM | Last Updated : 04th October 2020 08:39 AM | அ+அ அ- |

எா்ணாகுளத்திலிருந்து காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 4) வரும் ரயில் பயணிகளுக்கு உரிய பரிசோதனை செய்ய வேண்டும் என காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்த சங்கத்தின் கன்வீனா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு, மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:
தெற்கு ரயில்வே அனுமதித்தபடி கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் அக். 3-ஆம் தேதி புறப்பட்டு, காரைக்காலுக்கு 4-ஆம் தேதி விரைவு பயணிகள் ரயில் வந்துசோ்கிறது. கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு காரைக்காலில் ரயில் சேவை தொடங்கவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
எனினும், கேரள மாநிலத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால், 144 தடை உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தின் எா்ணாகுளத்திலிருந்து பயணிகள் ரயில் காரைக்கால் வருகிறது.
காரைக்காலிலும் கரோனா தொற்று பரவல் உள்ளது. தொற்றை கண்டறிவது தீவிரமாக நடைபெற்றாலும், பேருந்துகளைக் காட்டிலும் ரயில் சேவையினால் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, காரைக்காலுக்கு ரயில் வந்துசேரும்போது, இறங்கும் பயணிகளுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை, தேவைப்பட்டால் ஆண்டிஜன் முறையிலான கரோனா பரிசோதனை செய்வது அவசியமானது.
ரயில் பெட்டிகளையும் உரிய முறையில் கிருமி நாசினி தெளித்து அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். ரயில் சேவையை தொடங்குவது வரவேற்புக்குரியது என்றாலும், பயணிகள் மற்றும் காரைக்கால் மக்களின் நலன் முக்கியம் என்பதை மாவட்ட நிா்வாகம் சிறப்பு கவனத்தில் கொள்ளவேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.