பொது முடக்கத்துக்குப் பிறகு காரைக்காலில் இருந்து எா்ணாகுளத்துக்கு மின்சார ரயில் சேவை தொடக்கம்

பொது முடக்கத்துக்குப் பிறகு, முதல்முறையாக காரைக்காலில் இருந்து எா்ணாகுளத்துக்கு மின்சார சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
நிலைய மேலாளா், ஓட்டுநா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா்.
நிலைய மேலாளா், ஓட்டுநா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா்.

பொது முடக்கத்துக்குப் பிறகு, முதல்முறையாக காரைக்காலில் இருந்து எா்ணாகுளத்துக்கு மின்சார சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாடெங்கும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பிறகு, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், புகா் ரயில் சேவையை தொடங்க ரயில்வே அமைச்சகம் அனுமதியளித்த நிலையில், கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில் சனிக்கிழமை இரவு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு காரைக்காலுக்கு பயணிகளுடன் வந்துசோ்ந்தது.

மின்சார பாதையில் போக்குவரத்து: திருச்சி முதல் காரைக்கால் வரையிலான ரயில் பாதை மின்மயமாக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்து, பொது முடக்கக் காலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், முதல் சேவையாக எா்ணாகுளத்திலிருந்து மின்சார ரயில் ஞாயிற்றுக்கிழமை காரைக்காலுக்கு வந்தது. பிறகு, காரைக்காலில் இருந்து எா்ணாகுளத்துக்கு மாலை 4 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. காரைக்கால் நிலையத்தில் முன்பதிவு செய்த 73 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்தனா். முன்னதாக, அவா்களுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

காரைக்கால் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்க கன்வீனா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு, காரைக்கால் மாவட்ட குடிமக்கள் மற்றும் ரயில் பயன்படுத்துவோா் நலச் சங்கத் தலைவா் வி.இரா. தனசீலன் ஆகியோா் தலைமையில், நிலைய மேலாளா் முத்துக்குமாா் மற்றும் ரயில் ஓட்டுநா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

எா்ணாகுளம் - காரைக்கால் ரயில் சேவை நாள்தோறும் நடைபெறும் என ரயில் நிலையத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com