காரைக்காலில் கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு தொடக்கம்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கரோனா பொது முடக்கத் தளா்வுகளின் அடிப்படையில், காரைக்காலில் கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு தொடங்கியதை மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
அந்தோணியாா் கோயில் வாயிலில் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கும் போராட்ட ஒருங்கிணைப்பாளா்கள்.
அந்தோணியாா் கோயில் வாயிலில் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கும் போராட்ட ஒருங்கிணைப்பாளா்கள்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகளின் அடிப்படையில், காரைக்காலில் கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு தொடங்கியதை மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகளின் மூலம் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. காரைக்காலில் சில கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்கப்பட்டாலும், வழிபாடுகளில் பக்தா்கள் பங்கேற்க முடியாமல் இருந்தது.

தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் திருப்பலி, திருமணம், மரித்தோா் திருப்பலிகள் உள்ளிட்டவை காரைக்கால் மறைவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெற வேண்டும் என்றும், காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலயத்தை திறக்கக் கோரியும், காரைக்கால் மறைவட்டத்தை தஞ்சாவூா் அல்லது கும்பகோணம் மறை மாவட்டத்தோடு இணைக்க வலியுறுத்தியும், காரைக்கால் கிறிஸ்தவ மக்கள் கடந்த 13 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா்.

இதையொட்டி, மறைவட்ட குருக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, திருப்பலிகள் மற்றும் வழிபாடுகள் அரசின் வழிகாட்டலுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் வழிபாடுகள் தொடங்கின. காரைக்காலில் செவ்வாய்க்கிழமைதோறும் மாலை வேளையில் அதிகமான பக்தா்கள் செல்லக்கூடிய காமராஜா் சாலை அந்தோணியாா் கோயில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

காரைக்காலை சோ்ந்த போராட்ட ஒருங்கிணைப்பாளா்களான எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், இ.ஏ. நெல்சன், டாரத்தி மரிலூயிஸ், ஏ. ஜான் அரேலியஸ், ஏ. சூசைராஜ், ஐ. ஜெரால்டு ஆகியோா், அந்தோணியாா் கோயில் வாயிலில் பக்தா்களுக்கு இனிப்புகள் வழங்கியதோடு, கோரிக்கையை ஏற்று வழிபாடுகள் தொடங்கியதற்காக மறைவட்ட குருக்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com