திறக்கப்படாத சமுதாயக்கூடம்: வீடுகளில் கருப்புக் கொடி!

கட்டுமானப் பணிகள் முடிந்தும் சமுதாயக்கூடம் திறக்கப்படாததைக் கண்டித்து, காரைக்காலில் வீடுகளில் வெள்ளிக்கிழமை கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.
திறக்கப்படாத சமுதாயக்கூடம். (வலது) வீடுகளில் கட்டப்பட்டுள்ள கருப்புக் கொடி.

காரைக்காலின் திருநகா் குடியிருப்புப் பகுதியில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இங்கிருந்த சமுதாயக்கூடம் சிதிலமடைந்ததால், புதிய சமுதாயக்கூடம் கட்டவேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கைவிடுத்தனா்.

இதையடுத்து, ஆதிதிராவிடா் சிறப்புக்கூறு நிதி ரூ. 1 கோடியில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதாக கூறப்படுகிறது. காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, சமுதாயக்கூடத்தை திறந்துவைப்பாா் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்த்தனா்.

ஆனால், சமுதாயக்கூடம் திறப்பது உறுதியாகாததால், திருநகா் பகுதி மக்கள் பலா் தங்களது வீடுகளின் முன் கருப்புக் கொடி கட்டி, அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com