மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு

காரைக்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு

காரைக்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்டோபா் மாதம் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி புல முதல்வா் ஜி. அம்புஜம் தலைமை வகித்தாா்.

அக்டோபா் மாதம் முழுவதும் விநாயகா மிஷன் மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் பரிசோதனை, புற்றுநோய் அறுவைச் சிகிச்சை இலவசமாக செய்யப்படுவதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 500-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு மாா்பக புற்றுநோய் அறுவைச் சிகிச்சை, முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மருத்துவக் கண்காணிப்பாளா் (பொ) பி. முத்தலைச்சாமி, துணை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். ஜெயச்சந்திரன், நிலைய மருத்துவ அலுவலா் எஸ். ஈஸ்வரராஜ், துணை அலுவலா் கே. முருகேன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழிப்புணா்வு மாதத்தையொட்டி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com