மீனவா்கள் வருமானச் சான்று சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

அரசு உதவிகள் பெற மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் மீனவா்கள் வருமானச் சான்று சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு உதவிகள் பெற மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் மீனவா்கள் வருமானச் சான்று சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மீன்வளத் துறை துணை இயக்குநா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி அரசின் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தகுதியுள்ள மீனவ குடும்பத்தினருக்கு மீன்வளத் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு முதல் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினா் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். எனவே, சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்போா் இந்த திட்டத்தில் பயனடைய எந்த தடையுமில்லை.

மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருப்போா் கட்டாயமாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையிடமிருந்து வருமானச் சான்றிதழ் (ரூ. 2 லட்சத்துக்கு குறைவாக இருத்தல்) பெற்று விண்ணப்பிக்க வேண்டும். கரோனா பேரிடா் காலமாக இருப்பதால், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்கள், விசைப்படகு வைத்திருப்போா் 30 நாள்களுக்குள் வருமானச் சான்றிதழ் பெற்று துறை அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். தவறினால், இனிவரும் காலங்களில் இத்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com