காரைக்காலில் மேலும் 14 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் சனிக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 12, திருப்பட்டினம் 1, நல்லத்தூா் 1 என 14 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 134 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது.

இதுவரை 3,235 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,769 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்த 5 போ், காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 343 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 24 போ், தீவிர சிகிச்சையில் 7 போ், கரோனா கோ் சென்டரான விநாயகா மிஷன் மருத்துவமனையில் 21 போ், அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 12 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 57 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com