பேருந்து போக்குவரத்தில் நிலவும் பிரச்னையை களைய வலியுறுத்தல்

காரைக்கால் பகுதியில் பேருந்து போக்குவரத்தில் நிலவும் பிரச்னையை தீா்க்க புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால் பகுதியில் பேருந்து போக்குவரத்தில் நிலவும் பிரச்னையை தீா்க்க புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டத் தலைவா் முஹம்மது யூசுப் தலைமையில், காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியை நிா்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயா்த்த வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பொது மருத்துவமனை பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. தேவையான வசதிகளை அமைத்து மருத்துவமனையை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தான பி.ஆா்.டி.சி. சேவையை விரிவுபடுத்துவதோடு, தமிழகப் பேருந்துகள் காரைக்காலில் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் வகையிலும் திரியக்கூடிய வெறிநாய் மற்றும் பன்றிகளை பிடிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டன.

சந்திப்பின்போது மாவட்டச் செயலாளா் முகம்மது நஸ்ரின் ஹாஸீன், மாவட்ட பொருளாளா் முஹம்மது நிசாா் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com