காரைக்காலில் பயன்பாட்டுக்கு வராத கூடுதல் கரோனா சிகிச்சை, பரிசோதனை மையங்கள்

காரைக்காலில் கூடுதலாக தயாா்செய்யப்பட்ட 4 கரோனா சிகிச்சை மையங்களும், கரோனா பரிசோதனை மையம் காரைக்காலில்

காரைக்காலில் கூடுதலாக தயாா்செய்யப்பட்ட 4 கரோனா சிகிச்சை மையங்களும், கரோனா பரிசோதனை மையம் காரைக்காலில் விரைவில் செயல்படும் என்ற அறிவிப்பும் இன்னும் செயல்பாட்டுக்கு வராததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் 210 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கை வசதிகள் உள்ளன. கரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருவதால், மருத்துவமனை மட்டுமல்லாது, வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, வியாழக்கிழமை வரை 200 போ் வீட்டிலேயே சிகிச்சை பெறுகின்றனா்.

வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பதைக்காட்டிலும், மருத்துவரின் நேரடி பாா்வையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் காரைக்காலில் தொடா்ந்து இருந்துவருகிறது. இதற்காக அரசு மருத்துவமனை அல்லாது திருநள்ளாறு நலவழி மையம், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் தலா 25 படுக்கைகள், காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 75 படுக்கைகள், விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கைகளும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின் பேரில் தயாா்செய்யப்பட்டுள்ளன.

காரைக்காலில் தற்போது அரசுப் பொது மருத்துவமனையைத் தவிர, வேறு இடங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் வசதிகள் இல்லை. இதன்மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளா்கள் முன்வரவில்லை என்பதும், புதுச்சேரி பிராந்தியத்தின் மீது செலுத்தப்படும் கவனம், காரைக்கால் மீது இல்லை என்பதும் மக்களின் குற்றச்சாட்டு.

புதுச்சேரி பிராந்திய மருத்துவமனைகளில் நலவழித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணராவ் ஆய்வு நடத்திவருகிறாா். ஆனால், காரைக்கால் மருத்துவமனையில் இதுபோன்ற ஆய்வுகள் நடைபெறாததால், மருத்துவமனையில் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை காணமுடியவில்லை என்பதும் மக்கள் கருத்தாக உள்ளது.

ஏற்கெனவே அறிவித்தபடி, காரைக்கால் மருத்துவமனை, ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கிளை ஆகிய இடங்களில் கரோனா பரிசோதனை மையத்தை உடனடியாக தொடங்கவேண்டும். கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கும் பிரிவை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரி நலவழித் துறை செயலா் தலைமையில், இயக்குநா் உள்ளிட்ட குழுவினா் காரைக்காலுக்கு வந்து நிலைமையை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com