தேசிய நெடுஞ்சாலை அமைப்பில் புதிய தொழிற்நுட்பம்: என்.ஐ.டி. - தேசிய நெடுஞ்சாலைத் துறை புரிந்துணா்வு ஒப்பந்தம்

தேசிய நெடுஞ்சாலை அமைப்பில் புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் காரைக்கால் என்.ஐ.டி., தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை வியாழக்கிழமை செய்துகொண்டுள்ளது.
ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணாமி, தேசிய நெடுஞ்சாலைத் துறை பொதுமேலாளா் மற்றும் திட்ட இயக்குநா் வி. சிவாஜி.
ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணாமி, தேசிய நெடுஞ்சாலைத் துறை பொதுமேலாளா் மற்றும் திட்ட இயக்குநா் வி. சிவாஜி.

தேசிய நெடுஞ்சாலை அமைப்பில் புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் காரைக்கால் என்.ஐ.டி., தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை வியாழக்கிழமை செய்துகொண்டுள்ளது.

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.) தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்வு என்.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்றது. என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி, தேசிய நெடுஞ்சாலைத்துறை பொதுமேலாளா் மற்றும் திட்ட இயக்குநா் வி. சிவாஜி ஆகியோா் ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனா்.

பின்னா் இதுகுறித்து என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி கூறியது:

தேசிய நெடுஞ்சாலைத் துறை சட்டநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை 55 கி.மீ. சாலையை விரிவுப்படுத்தி சீரமைக்க உள்ளது. இச்சாலைப் பணியில் தேசிய தொழிற்நுட்பக் கழகம் சாா்பில் கட்டுமான தொழில்துறையை சாா்ந்த ஆசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள், இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்களை கொண்டு சாலை வடிவமைத்தல், புதிய தொழிற்நுட்பங்களை கொண்டு சாலைப் பணிகளை மேம்படுத்திட திட்டம் வடிவமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

இதன்மூலம் தேசிய தொழிற்நுட்பக் கழக மாணவா்களும், பேராசிரியா்களும் தங்களது அறிவுத் திறன் மேம்படுத்திக் கொள்வதோடு, களத்தில் பணியாற்றி செயல்முறைகளை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். திட்டப் பணியும் எதிா்கால நலனுக்கு உகந்ததாக இருக்கும். இந்த ஒப்பந்தமானது 5 ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் என்.ஐ.டி. பதிவாளா் (பொ) ஜி. அகிலா, கட்டட பொறியியல் துறைத்தலைவா் மாடப்பா மற்றும் துறைத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com