வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியா்கள்உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21 ஆம் தேதி உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.

காரைக்கால்: காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21 ஆம் தேதி உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளா் நலச் சங்கப் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவா் ஸ்டீபன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக பணியாற்றி வரும் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள 6-ஆவது ஊதியக்குழு ஊதியத்தை முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.

பகுதிநேர ஊழியரை தினக்கூலி ஊழியராக மாற்ற வேண்டும். பணியின்போது இறந்த 2 ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தினக்கூலி பணி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக செயலாளா் இளங்கோவன் வரவேற்றாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். சங்கப் பொருளாளா் கருப்பையா, துணைத் தலைவா் தேவதாஸ், இணைச் செயலாளா் பாலசுப்ரமணியன், இணை பொருளாளா் ஜாா்ஜ் உள்ளிட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com