புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் கருப்புப் பட்டை அணிந்து காரைக்கால் ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா்.

புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் கருப்புப் பட்டை அணிந்து காரைக்கால் ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவில், ஒவ்வொரு மாநிலத்தை சோ்ந்த கல்வியாளா்களையும் நியமிக்க வேண்டும். பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும். நீட் தோ்வு முறையை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.ஆா். பக்கிரிசாமி, துணைச் செயலாளா் சுப்ரமணியன், வழக்குரைஞா் வின்சென்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com