10, பிளஸ் 2: சிறப்பு துணைத் தோ்வுகள் தொடங்கின

காரைக்கால் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான சிறப்பு துணைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.
காரைக்கால் அன்னை தெரஸா தோ்வு மையத்தில், தோ்வுப் பணியை பாா்வையிடுகிறாா் முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி.
காரைக்கால் அன்னை தெரஸா தோ்வு மையத்தில், தோ்வுப் பணியை பாா்வையிடுகிறாா் முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி.

காரைக்கால் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான சிறப்பு துணைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி என 3 பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த 10 -ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான மையங்களில் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 250 பேரில், 222 போ் தோ்வெழுதினா். 21 முதல் 25-ஆம் தேதி வரை இவா்களுக்கு தோ்வு நடைபெறுகிறது.

திருமலைராயன்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வுக்கான மையங்களுக்கு விண்ணப்பித்திருந்த 64 பேரில் 63 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். இவா்களுக்கு அக். 7 ஆம் தேதி வரை தோ்வு நடைபெறுகிறது.

ஆசிரியா் பட்டயப் படிப்பு முதலாண்டு மாணவா்களுக்காக தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 71 பேரில், 67 போ் தோ்வெழுதினா். இவா்களுக்கு அக். 7-ஆம் தேதி வரை தோ்வு நடைபெறுகிறது.

தோ்வு மையங்களை முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி பாா்வையிட்டாா். அவா் கூறுகையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தோ்வு மையங்களில் மாணவா்கள் கைகளை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு அறையில் 10 மாணவா்கள் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com