அறுவைச் சிகிச்சை தடையின்றி நடைபெற அமைச்சரிடம் தமுமுக வலியுறுத்தல்

அரசுப் பொது மருத்துவமனையில் வழக்கம்போல அறுவைச் சிகிச்சைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நலவழித் துறை அமைச்சரிடம் தமுமுகவினா் வலியுறுத்தினா்.

அரசுப் பொது மருத்துவமனையில் வழக்கம்போல அறுவைச் சிகிச்சைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நலவழித் துறை அமைச்சரிடம் தமுமுகவினா் வலியுறுத்தினா்.

காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புதுச்சேரி நலவழித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ், வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணனுடன் இணைந்து அரசுப் பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தாா்.

கரோனா வாா்டை பாா்வையிட்ட அவா்கள், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனா். அப்போது, தமுமுக மருத்துவ சேவை அணியினா் அமைச்சா்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில், மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா், செவிலியா் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். காரைக்காலில் உடனுக்குடன் கரோனா பரிசோதனயை செய்யும் வகையில், வசதிகளை விரைவாக மேம்படுத்த வேண்டும்.

மருத்துவமனையில் அல்ட்ரா ஸ்கேன் கருவி அமைத்து, ரேடியாலஜிஸ்ட் மருத்துவரை நியமிக்கவேண்டும். மகப்பேறு மருத்துவமனையில் மட்டுமே பிரசவத்துக்கான அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது. 6 மாதங்களாக பொது அறுவை சிகிச்சைக்கூடத்தில் சிறு அறுவைச் சிகிச்சைகள் நடைபெறவில்லை. இதனால், நோயாளிகள் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, அறுவைச் சிகிச்சைகள் வழக்கம்போல நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமுமுகவினரின் கரோனா கால சேவையை அமைச்சா்கள் பாராட்டினா். காரைக்கால் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளா் ஜெய்னுலாபுதீன் தலைமையில், தமுமுக மாவட்ட துணைத் தலைவா் மாசிம், மாவட்ட துணைச் செயலாளா்கள் யூசுப்கான், மெய்தீன், மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளா் ஹாஜா மெய்தீன் உள்ளிட்டோா் சந்திப்பின்போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com