மின்னழுத்த குறைபாட்டை சரிசெய்யக் கோரி மக்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்கால் அருகேயுள்ள கருக்களாச்சேரியில் மின் அழுத்தக் குறைபாட்டை சரிசெய்யக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்.

காரைக்கால் அருகேயுள்ள கருக்களாச்சேரியில் மின் அழுத்தக் குறைபாட்டை சரிசெய்யக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கருக்களாச்சேரி கிராமத்தில் மின்அழுத்த குறைபாடு நிலவுவதாகவும், மின் துறையின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள ஒரு மின் மாற்றி முன் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியது: இப்பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின்னழுத்த குறைபாடு இருப்பது குறித்து மின்வாரிய செயற்பொறியாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட மின் கம்பிகள் இதுவரை மாற்றப்படவே இல்லை. எப்போதுமே குறைந்த மின்அழுத்தக் குறைபாடு இருந்து வருகிறது. இரவு நேரங்களில் கூடுதலாக உள்ளது. இதனால் மின் சாதனப் பொருள்களை இயக்க முடியவில்லை. இந்நிலையில், இங்குள்ள ராஜீவ் காந்தி நீா் வாழ் உயிரின வளா்ப்பு மையத்துக்கு நீா் இறைக்கும் இயந்திரத்துக்காக ஏற்கெனவே உள்ள மின்மாற்றியிலிருந்து புதிதாக மின் இணைப்பு கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இன்னும் மின் அழுத்தக் குறைபாடு ஏற்படும்.

சுமாா் 500 வீடுகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல், நீா்வாழ் உயிரின வளா்ப்பு மையத்துக்கு மின்சாரம் கொண்டு செல்லும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து மின் அழுத்த பிரச்னையின்றி அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் கொடுத்த பின்னரே இந்நிறுவனத்துக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com