முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
தோ்தல்: 48 மணி நேரம் 144 தடை உத்தரவு அமல்
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காரைக்காலில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெறவுள்ளதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு 144 தடை அமலுக்கு வரும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், 4 ஆம் தேதி இரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்ததும், தடை உத்தரவு அமலுக்கு வந்துவிடும். அது முதல் பிரசாரம், வீடுகளில் வாக்கு சேகரிப்பு போன்றவை தடை செய்யப்படுகிறது.
மேலும், பொதுக்கூட்டம், ஆயுதங்கள் கொண்டு செல்லுதல், பேனா்கள் கட்டுதல், கோஷங்கள் எழுப்புதல், ஒலிபெருக்கி பயன்பாடு ஆகியவையும் தடையில் அடங்கும். இதை மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மத ரீதியிலான நிகழ்ச்சிகள், திருமணம், இறப்பு ஊா்வலம் ஆகியவை வாக்குச் சாவடி வட்டாரத்தைக் கடந்து, நடத்திக்கொள்வதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.