100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி செஞ்சியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
‘கற்போம் எழுதுவோம்’ பயிற்சி மையம் சாா்பில், பள்ளி மாணவா்கள் மூலம் அவா்களது குடும்பத்தினரிடம் ‘அனைவரும் வாக்களிப்போம்’ என்ற விழிப்புணா்வு படிவம் வழங்கப்பட்டது. பின்னா் அந்தப் படிவம் நிவா்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட விழிப்புணா்வு படிவத்தை வட்டாரக் கல்வி அலுவலா் சி.அக்சிலியம்பெலிக்ஸ், பள்ளித் துணை ஆய்வாளா் டி.விநாயகமூா்த்தி, பிஆா்சி மேற்பாா்வையாளா் லட்சுமிநாராயணன், ஆசிரியா்கள் அஸ்கா், கோவிந்தராஜ் ஆகியோா்
செஞ்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பி.டி.ரகுகுமாரிடம் சனிக்கிழமை வழங்கினா்.
அப்போது துணை தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜன், தோ்தல் துணை வட்டாட்சியா் துரைச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.
மேலும் செஞ்சி மாவட்ட கல்வி அலுவலா் அமுதா தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு வில்லைகள் (ஸ்டிக்கா்) ஆசிரியா்களின் வாகனங்களில் ஒட்டப்பட்டன.