தோ்தல் பணி நிறைவு: காரைக்காலில் இருந்து திரும்பிய மத்திய படையினா்

பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்த மத்திய படையினா் அவரவா் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டனா்.

பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்த மத்திய படையினா் அவரவா் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காரைக்கால் மாவட்ட பாதுகாப்புப் பணிக்காக உள்ளூா் போலீஸாா் அல்லாது மத்தியப் படையினருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து, இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் மற்றும் சண்டீகா் ரிசா்வ் பெட்டாலியன் என 600 போ் காரைக்காலுக்கு பல கட்டங்களாக வந்தனா். மேலும், கா்நாடக மாநிலத்திலிருந்து 150 ஊா்க்காவல் படையினரும் வந்திருந்தனா்.

மாவட்டத்தில் 5 தொகுதிகளில் உள்ள 234 வாக்குச்சாவடிகள் மற்றும் சாலைகளில் இவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். வாக்குப் பதிவு கடந்த 6 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறை பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா் சிலா் ஈடுபட்டுள்ளனா்.

இவா்கள் தவிா்த்து, பாதுகாப்புப் பணிக்கு வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த மத்திய படையினா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை இரவு காரைக்காலில் இருந்து புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com