தற்காப்புக் கலையில் சிறப்பிடம் பெற்ற இரட்டையா்களுக்கு பதக்கம்

தற்காப்புக் கலையில் சிறப்பிடம் பெற்ற இரட்டையா்களுக்கு பதக்கம்

இளம் வயதில் தற்காப்புக் கலையில் சிறப்பிடம் பெற்றதைப் பாராட்டி, பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காரைக்கால் இரட்டையா்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

இளம் வயதில் தற்காப்புக் கலையில் சிறப்பிடம் பெற்றதைப் பாராட்டி, பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காரைக்கால் இரட்டையா்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

காரைக்காலில் உள்ள தனியாா் பள்ளியில் தற்போது 7 ஆம் வகுப்பு பயிலும் இரட்டையா்களான கே. ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி ஆகியோா் சிறுவயது முதல் கராத்தே, சிலம்பம், கிக் பாக்ஸிங், குபுடோ, தேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை காரைக்காலில் உள்ள தனியாா் தற்காப்புக் கலை பயிற்சி அமைப்பில் பயிலத் தொடங்கினா்.

இவா்கள் 9 வயதுக்குள் சா்வதேச போட்டிகள் பலவற்றில் பங்கேற்று சுமாா் 200 பதக்கங்களை பெற்றுள்ளனா். பெங்களூருவில் அன்னை தெரஸா பல்கலைக்கழகம் கடந்த வாரம் நடத்திய பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கும் நிகழ்வுக்கு, காரைக்காலைச் சோ்ந்த இரட்டையா்களும் அழைக்கப்பட்டிருந்தனா். இவா்கள் தங்களது கலைத் திறமையை முக்கிய பிரமுகா்கள் முன்னிலையில் செய்துகாட்டினா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பெங்களூரு காவல் உதவி ஆணையா் முகம்மது சஜாத் கான் இரட்டையா்களுக்கு பதக்கங்களை வழங்கிப் பாராட்டினாா்.

விருது பெற்ற இரட்டையா்களுக்கு பள்ளி நிா்வாகம், விஆா்எஸ் அகாதெமி என்ற கலைப் பயிற்சி அமைப்பின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com