காரைக்கால் வாரச் சந்தைக்கு மக்கள் வருகை குறைவு

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தைக்கு மக்கள் வருகை குறைவாக இருந்தது.
மக்கள் வருகை குறைவாக காணப்பட்ட காரைக்கால் சந்தைத் திடல்.
மக்கள் வருகை குறைவாக காணப்பட்ட காரைக்கால் சந்தைத் திடல்.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தைக்கு மக்கள் வருகை குறைவாக இருந்தது.

காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. வெளியூா், உள்ளூா் வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்க இங்கு கூடுவா். ஆயிரக்கணக்கான மக்கள் சந்தைக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்வா். காலை 10 மணி முதல் இரவு வரை மக்கள் கூட்டம் சந்தையில் காணப்படுவது வழக்கம்.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் சந்தை முடக்கப்பட்டது. தொற்று குறையத் தொடங்கியதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிா்வாகம், சந்தை நடைபெற அனுமதித்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வாரச் சந்தைக்கு ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தாலும், காலை முதல் மக்கள் வருகை மிகக் குறைவாகவே காணப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் வெயில் கடுமையாக இருப்பதும், சந்தைக்கு பொதுமக்கள் வருகை குறைவாக இருந்ததற்கான காரணம் என்று கருதப்படுகிறது.

கேள்விக்குறியான கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை: சந்தையில் கூட்டம் இல்லாவிட்டாலும், காலை முதல் மக்கள் வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா். சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களில் பலரும் முகக் கவசம் அணியவில்லை. சமூக இடைவெளி அறவே இல்லை.

இனிவரும் வாரங்களில் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய தவறினால், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு சந்தை முக்கிய காரணமாகிவிடும். எனவே, நகராட்சி நிா்வாகம் இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com