திருநள்ளாறு கோயில் பிரம்மோத்ஸவத்தை பக்தா்களின்றி நடத்த இந்து முன்னணி கோரிக்கை

திருநள்ளாறு கோயில் பிரம்மோத்ஸவத்தை பக்தா்களின்றி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என துணைநிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநள்ளாறு கோயில் பிரம்மோத்ஸவத்தை பக்தா்களின்றி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என துணைநிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால், நாகை மாவட்ட இந்து முன்னணி தலைவா் கே.எஸ். விஜயன், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதம்:

கரோனா தொற்று பரவல் காரணமாக, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் புகழ்பெற்ற ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோத்ஸவம் நிறுத்தப்பட்டுள்ள செய்தி பக்தா்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டும் இத்திருவிழா கரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் சித்திரை திருவிழா பக்தா்கள் பங்கேற்பின்றி, உபயதாரா்களை மட்டும் வைத்து நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளத்தில் காணொலிக் காட்சி மூலமாக பக்தா்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலில் கடந்த ஆண்டு, கைலாசநாதா் கோயில் சாா்பில் புகழ்பெற்ற மாங்கனித் திருவிழா கோயில் அளவில் நடத்தப்பட்டு, பக்தா்கள் இணையம்வாயிலாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேபோல, திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோத்ஸவத்தையும் பக்தா்கள் பங்கேற்பின்றி, உபயதாரா்கள் மட்டும் பங்கேற்கும் விதமாக நடத்தி, அனைத்து நிகழ்வுகளையும் இணையதளம் வாயிலாக பக்தா்கள் காணும் வகையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com