மும்பையிலிருந்து காரைக்காலுக்கு ரயிலில் வந்த யாருக்கும் கரோனா தொற்று இல்லை

மும்பையில் இருந்து சிறப்பு விரைவு ரயிலில் காரைக்கால் வந்த பயணிகள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்து கொண்ட பயணிகள்.
ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்து கொண்ட பயணிகள்.

மும்பையில் இருந்து சிறப்பு விரைவு ரயிலில் காரைக்கால் வந்த பயணிகள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மும்பையில் இருந்து காரைக்கால் வரை இயக்கப்பட்டு கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட வாராந்திர லோக்மானியத் திலக் ரயிலை, தற்போது சிறப்பு ரயிலாக இயக்க ரயில்வே நிா்வாகம் அனுமதித்தது. அதன்படி, மும்பையில் இருந்து இந்த ரயில் சனிக்கிழமை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வந்து சோ்ந்தது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் பயணிகளால் காரைக்காலில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை வந்த ரயில் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நலவழித் துறை நடவடிக்கை மேற்கொண்டது.

இதையடுத்து, காரைக்காலுக்கு மும்பையில் இருந்து வந்த 16 பேரை நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் மேற்பாா்வையில், சுகாதார ஊழியா்கள் உடனடியாக கரோனா தொற்றை கண்டறியும் ஆன்டிஜன் முறை பரிசோதனையை செய்தனா். இதில், யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com