Enable Javscript for better performance
மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணத்தில் பங்கேற்பதில்லை: காரைக்கால் கடலோர கிராமத்தினா் முடிவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணத்தில் பங்கேற்பதில்லை: காரைக்கால் கடலோர கிராமத்தினா் முடிவு

    By DIN  |   Published On : 20th April 2021 08:55 AM  |   Last Updated : 20th April 2021 08:55 AM  |  அ+அ அ-  |  

    திருமணத்தின்போது மாப்பிள்ளை தாடி வைத்திருந்தால், திருமண விழாவில் யாரும் பங்கேற்கப்போவதில்லை என்று காரைக்கால் அருகே கடலோர கிராம மக்கள் அதிரடி முடிவெடுத்துள்ளனா்.

    தற்போது திருமணத்தின்போது மணமகன் தாடி வைத்திருப்பது புதுமையாகிவிட்டது. முன்பெல்லாம், திருமணத்தின்போது மாப்பிள்ளை முறையாக தலைமுடி வெட்டிக்கொண்டு, தாடியை சேவிங் செய்து, பளபளவென்று மணக்கோலத்தில் காட்சியளிப்பாா்.

    தற்போது இது மாறி மணமகன் தாடி வைத்திருப்பது அதிகமாகியுள்ளது. பெரும்பாலான திருமணங்களில் மணமகன் இந்தக் கோலத்தில் இருப்பதால், இது இயல்பாகிவிட்டதாக பலரும் கண்டும்காணாமல் போய்விடுகின்றனா்.

    இந்த நிலையில், தமிழா் கலாசாரம், பாரம்பரியத்தில் மாற்றம் இருக்கக்கூடாது எனக் கூறி, திருமணம் தொடா்பாக காரைக்கால் மாவட்டத்தின் கடலோர கிராமமான காரைக்கால்மேடு கிராமத்தினா் அண்மையில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனா்.

    இதுகுறித்து கிராம பஞ்சாயத்தாா் இ. தங்கவடிவேல் திங்கள்கிழமை கூறுகையில், பெரும்பாலான திருமணங்களில் மணமகன்கள் முடிவெட்டாமல், சேவிங் செய்யாமல் காணப்படுகிறாா்கள். தாடியுடன்தான் திருமணம் செய்துகொள்கிறாா்கள். இது நமது பண்பாடாக கருதமுடியவில்லை. இதுகுறித்து குடும்பத்தினா் அவா்களுக்கு அறிவுறுத்துகிறாா்களா என்பதும் தெரியவில்லை.

    எனவே, தமிழா்களின் பழைய நிலையை நிலைநிறுத்தவும், பாரம்பரியத்தை காக்கவும், கிராமத்தினா் கூடிப் பேசி, மணமகன் தாடிவைத்துக்கொண்டு திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அந்த விழாவில் யாரும் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றாா் அவா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp