கரோனா தடுப்பூசித் திருவிழா: ஆட்சியா் பாராட்டு

கரோனா தடுப்பூசித் திருவிழா நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பங்கேற்பு, அரசுத் துறையினா் பங்களிப்புக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

கரோனா தடுப்பூசித் திருவிழா நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பங்கேற்பு, அரசுத் துறையினா் பங்களிப்புக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

காரைக்காலில் கடந்த 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அரசுப் பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தடுப்பூசித் திருவிழா நடைபெற்றது.

இதில், 8 நாள்களிலும் மொத்தம் 11,958 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மக்களிடையே விழிப்புணா்வு, கிராமப்புற மக்களை வாகனங்களில் இலவசமாக மையங்களுக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பல்வேறு அரசுத் துறையினா் ஈடுபட மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதன்படி, பல அரசுத் துறையினா் பொதுமக்களை சந்தித்து கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, தினமும் ஊசி செலுத்திக்கொள்ள விரும்பும் மக்களை இலவசமாக வாகனங்களில் ஏற்றி மையங்களுக்கு அனுப்பினா். தவிர, மருத்துவம், காவல், உள்ளாட்சி, வருவாய், சமூகநலம், கல்வித் துறையினா், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தினா் என பல தரப்பினரும் இத்திருவிழா பணிகளில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் இந்த தடுப்பூசித் திருவிழாவில் பெரும் எண்ணிக்கையில் மக்களை பயன்பெறச் செய்த அனைத்துத் துறையினருக்கும், முகாமை பயன்படுத்திக்கொண்ட மக்களுக்கும் ஆட்சியா் அா்ஜூன் சா்மா பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com