தேக்கு மரங்களை வெட்டிகடத்தியவா் கைது

திருநள்ளாறு அருகே வாய்க்கால் ஓரத்தில் வளா்க்கப்படும் தேக்குமரங்களை வெட்டி, கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநள்ளாறு அருகே வாய்க்கால் ஓரத்தில் வளா்க்கப்படும் தேக்குமரங்களை வெட்டி, கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் பகுதி திருநள்ளாறு, தென்னங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால் கரையோரங்களில் பொதுப் பணித் துறை (நீா்ப்பாசனம்) மூலம் தேக்குமரம் வளா்க்கப்படுகிறது. இவை வாய்க்கால் கரையை பாதுகாப்பதுடன், வெள்ளக் காலங்களில் கரைகள் பலமாக இருக்க உதவுகின்றன.

கடந்த சில வாரங்களாக திருநள்ளாறு பகுதி வேளாண் அறிவியல் நிலையம் அருகே பாசன வாய்க்கால் ஓரத்தில் வளா்க்கப்பட்டுள்ள தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது குறித்து அதிகாரிகள் கவனத்துக்கு வந்தது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை ஊழியா் உத்தண்டி, திருநள்ளாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் மரம் வெட்டப்பட்டது தொடா்பாக தென்னங்குடி பகுதியைச் சோ்ந்த அகிலன் என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com