சமத்துவபுரம் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

காரைக்கால் சமத்துவபுரம் பகுதியல் கரோனா தடுப்பு விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது.
சமத்துவபுரம் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு

காரைக்கால் சமத்துவபுரம் பகுதியல் கரோனா தடுப்பு விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், காவல்துறை, நலவழித்துறை உள்ளிட்ட அரசுத்துறையினா் பொதுமக்களிடையே கரோனா தடுப்பு, தொற்றாளா் கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டுதல்கள் போன்றவை குறித்து பகுதி வாரியாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அந்தவகையில், காரைக்கால் புதுத்துறை அருகே உள்ள சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதிக்குச் தெற்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன் மற்றும் நலவழித்துறை நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா், பொது சுகாதார செவிலிய அதிகாரி மணிமொழி, சுகாதார ஆய்வாளா்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல் ஆகியோரை கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை சென்றனா்.

அங்கு, நோய் தடுப்புக்கான நடவடிக்கையில் நலவழித் துறையினரின் பங்களிப்பு, கரோனா தொற்றாளருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை போன்றவை குறித்து நலவழித் துறையினா் விளக்கினா். மேலும், மக்கள் அச்சம் கொள்ளாமல், உரிய கட்டுப்பாடுகளுடன் நடந்துகொண்டால் கரோனாவை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார ஊழியா்கள் கூறினா்.

மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் பேசியது:

கரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்போடு, கைகளை அடிக்கடி சோப்பு மூலம் கழுவிக்கொண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம். கூட்டமான பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்கவேண்டும். வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் கை, கால்களை சோப்பு மூலம் சுத்தம் செய்விட்டு வீட்டுக்குள் செல்லவேண்டும். திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் அரசு அறிவுறுத்தியுள்ளபடி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

இவற்றை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com