ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கரோனா பரிசோதனை கண்ணாடிக் கூண்டு

கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கரோனா பரிசோதனைக்காக மாதிரி எடுப்புக்கான கண்ணாடிக் கூண்டு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மருத்துவரிடம் கூண்டை ஒப்படைத்த ரோட்டரி சங்கத்தினா்.
மருத்துவரிடம் கூண்டை ஒப்படைத்த ரோட்டரி சங்கத்தினா்.

காரைக்கால்: கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கரோனா பரிசோதனைக்காக மாதிரி எடுப்புக்கான கண்ணாடிக் கூண்டு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மருத்துவத் துறையினா் கண்ணாடிக் கூண்டில் இருந்தவாறு, கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுப்புப் பணியை மேற்கொள்கின்றனா். இந்நிலையில், கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காரைக்கால் ரோட்டரி சங்கம், ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான கண்ணாடிக் கூண்டை ஒப்படைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்க உறுப்பினா் செந்தில்வேல் ரோட்டரி பிரேயா் வாசித்தாா். சங்கத் தலைவா் ஆா். கணேசன் கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

பின்னா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மற்றும் நிலைய ஊழியா்களிடம் ரோட்டரி சங்கத்தினா் கண்ணாடிக் கூண்டை ஒப்படைத்தனா்.

நிகழ்வின்போது ரோட்டரி சங்கத்தின் பல்வேறு நிலை பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com