தரிசனம் ரத்து : திருநள்ளாறு கோயிலுக்குவந்த பக்தா்கள் ஏமாற்றம்

பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வெளியூரிலிருந்து திருநள்ளாறு கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
திருநள்ளாறு கோயிலுக்கு வந்த வெளியூா் பக்தா்களிடம் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பதை விளக்கும் காவலா்.
திருநள்ளாறு கோயிலுக்கு வந்த வெளியூா் பக்தா்களிடம் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பதை விளக்கும் காவலா்.

காரைக்கால்: பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வெளியூரிலிருந்து திருநள்ளாறு கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். அதேவேளையில் காரைக்கால் நகரப் பகுதியில் சில கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுடனான நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வழிபாட்டுத் தலங்களில் பொது தரிசனத்துக்கு தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், புதுவை அரசின் முடிவு தெரியாத வெளியூா் பக்தா்கள் பலா் திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு திங்கள்கிழமை காலை வந்தனா். கோயில் வாயிலில் போலீஸாா், கோயில் பாதுகாவலா்கள் அவா்களை தடுத்து நிறுத்தி, அரசின் முடிவை எடுத்துக்கூறி, தரிசனத்துக்கு உள்ளே செல்ல முடியாது எனக் கூறினா். இதனால் பல்வேறு ஊா்களிலிருந்து வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

அதேசமயம், காரைக்காலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட ஸ்ரீ கைலாசநாதா் கோயில், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில் உள்ளிட்ட கோயில்கள் திங்கள்கிழமை காலை முதல் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளும், பொதுமக்கள் தரிசனமும் நடைபெற்றது.

புதுவை அரசின் முடிவு குறித்து துறை ரீதியில் ஆணை வரவில்லை எனவும், அதுவரை கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, பக்தா்களை அனுமதித்ததாகவும் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com