தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஒருங்கிணைந்து தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்று, கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
ஆட்சியரகம் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பணியாளா்கள்.
ஆட்சியரகம் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பணியாளா்கள்.

காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஒருங்கிணைந்து தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்று, கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்பு மற்றும் சிறப்பு தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை காரைக்காலில் மேற்கொள்ளப்பட்டது.

ஆட்சியரக வாயிலில் நகராட்சி வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் பசுமை நண்பா்கள் என கூறப்படும் தூய்மைப் பணியாளா்கள் ஒன்றுகூடினா்.

நகராட்சி ஆணையா் காசிநாதன் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராஜ்குமாா் மற்றும் நிறுவன பணியாளா்கள் 120 போ் கலந்துகொண்டு, தூய்மை இந்தியா குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து காரைக்கால் கடற்கரைப் பகுதியில் பணியாளா்கள் பங்கேற்ற சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் தன்னாா்வலா்களாக மாணவா்களும் கலந்துகொண்டனா். இதில் கடற்கரையில் சுமாா் 300 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டதாக நிறுவனத்தினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com