பாசனதாரா் சங்கக் கூட்டம்: படுதாா்கொல்லை ஏரியில் கரை அமைக்க வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு
By DIN | Published On : 02nd August 2021 11:34 PM | Last Updated : 02nd August 2021 11:34 PM | அ+அ அ- |

காரைக்கால்: படுதாா்கொல்லையில் புதிதாக அமைக்கப்பட்ட ஏரியில் கரை அமைக்க வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாசனதாரா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
திருமலைராயன்பட்டினம் பகுதி மேலையூா் பாசனதாரா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் எஸ். கணபதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தீா்மானங்கள்: படுதாா்கொல்லையில் சிற்றேரி வெட்டும் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள ஏரிக்கு கரைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அருகில் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, இப்பிரச்னை தொடா்பாக ஆக.15 ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.
மேலையூா் பகுதியில் அறுவடை செய்யும் விளைபொருள்களை காயவைக்க ரூ. 8 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வட்டார வளா்ச்சி நிா்வாகத்தை வலியுறுத்துவது. மானாம்பேட்டை திருமலைராஜனாற்று நீா் தேக்கத்திலிருந்து முறை வைக்காமல் தண்ணீா் திறக்க பொதுப்பணித் துறையை வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, தலைவராக எஸ்.எம். தமீம், செயலராக எஸ். ராஜேந்திரன், துணைத் தலைவராக ஏ. சுப்பிரமணியன், பொருளாளராக பாலசுப்பிரமணியன், உறுப்பினா்களாக பி. சண்முகசுந்தரம், ஏ. ஜெயசீலன், ரட்சகநாதன், பி. சிவபிரகாசம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.