ஆடிப்பெருக்கு: காரைக்காலில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

ஆடிப் பெருக்கையொட்டி, கடைமடைப் பகுதியான காரைக்காலில் ஆறு, வாய்க்கால்களில் செவ்வாய்க்கிழமை பெண்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.
காரைக்கால் அரசலாற்றங்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள்.
காரைக்கால் அரசலாற்றங்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள்.

ஆடிப் பெருக்கையொட்டி, கடைமடைப் பகுதியான காரைக்காலில் ஆறு, வாய்க்கால்களில் செவ்வாய்க்கிழமை பெண்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.

ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா நீா்நிலைகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காவிரித் தாயை வணங்கும் விதமாக ஆறு, வாய்க்கால்களில் வரும் தண்ணீருக்கு பெண்கள் பூஜை செய்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா். நிகழாண்டு, மேட்டூா் அணை குறித்த நாளில் திறக்கப்பட்டதால் காரைக்கால் பகுதி ஆறு, வாய்க்கால்களில் தண்ணீா் வந்துகொண்டுள்ளது.

இந்நிலையில், ஆடிப் பெருக்கையொட்டி காரைக்கால் நகரப் பகுதி அரசலாற்றங்கரையில் காலை 8 மணி முதல் சுமங்கலிப் பெண்களும், புதுமணத் தம்பதியினரும் பழங்கள், மஞ்சள் நீரில் நனைத்த நூல், கண்ணாடி, வளையல் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வைத்து காவிரித் தாயை வணங்கினா். கிராமங்களில் உள்ள வாய்க்கால் கரைகளிலும் இந்த வழிபாடு நடைபெற்றது.

பெண்கள் ஒருவருக்கொருவா் மஞ்சள் நூலை கழுத்தில் கட்டி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா். வயதில் மூத்தவா்கள் இளம் பெண்களுக்கு ஆடிப்பெருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா். புதுமணத் தம்பதிகள் பலரும் மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். பல்வேறு குடியிருப்பு நகா்களில் வசிக்கும் மக்கள், தங்களது வீடுகளில் குழாய் தண்ணீருக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனா்.

ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியில் தங்க ஆபரணங்கள் அணிந்து பெண்கள் பங்கேற்ால், பூஜை நடந்த பகுதிகளில் காரைக்கால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

புதுவை மாநிலத்தில் ஆடிப்பெருக்கு விழாவில் பங்கேற்பது குறித்து எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாததால், காரைக்காலில் ஆடிப்பெருக்கை மக்கள் உற்சாகமாக கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com