ஆடி கடைசி செவ்வாய்: காரைக்கால் கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி காரைக்கால் பகுதி அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.
காரைக்கால் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வழிபட்ட பக்தா்கள்.
காரைக்கால் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வழிபட்ட பக்தா்கள்.

ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி காரைக்கால் பகுதி அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூரில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று திரளான பக்தா்கள் பத்ரகாளியம்மனை தரிசனம் செய்து சென்றனா்.

காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் அம்பாளுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன. ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோயில் மற்றும் கடைத்தெரு மாரியம்மன் கோயிலும் காலை முதல் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்பாளை வழிபட்டனா்.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஆடி மாத லட்சாா்ச்சனை நடைபெற்றுவருவதால், ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் கோயிலிலும் ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

திருவிளக்கு வழிபாடு நடத்தப்படுமா ?: தை, ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமையில் 2,500 பக்தா்கள் பங்கேற்கும் திருவிளக்கு வழிபாடு அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெறுவது வழக்கம். 2020-ஆம் ஆண்டுக்கு பிப்ரவரி மாதம் தை கடைசி வெள்ளிக்கிழமை இவ்வழிபாடு நடத்தப்பட்ட பின் கரோனா பரவலால் இதுவரை நடத்தப்படவில்லை. நிகழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரும் 13-ம் தேதி திருவிளக்கு வழிபாடு நடத்தவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால் இதுவரை அதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் வழங்கவில்லை. திருவிளக்கு வழிபாடு நடத்த வாய்ப்பில்லை என்று கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com