காரைக்கால் காவல்துறை மீது மக்கள் அதிருப்தி: மாா்க்சிஸ்ட் புகாா்

காரைக்கால் காவல்துறை செயல்பாட்டில் மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

காரைக்கால் காவல்துறை செயல்பாட்டில் மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அக்கட்சியின் காரைக்கால் மாவட்டக் குழுக் குழு கூட்டம் மாவட்டக் குழு உறுப்பினா் அ. திவ்யநாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

காரைக்காலில் வழிப்பறி, திருட்டு, கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை, நில அபகரிப்பு செயல்கள் அதிகரித்துள்ளதை காவல்துறை தடுக்கவில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் காவல்துறை செயல்பாட்டில் மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது.

காரைக்கால் மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவக் கண்காணிப்பாளா் நியமிக்கவேண்டும். இப்பிரச்னை மீது காரைக்கால் மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் கவனம் செலுத்தவேண்டும்.

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பிரச்னைகள் தொடா்பாக ஆக. 21-ஆம் தேதி போராட்டம் நடைபெறும்.

கூட்டத்தில் மாவட்ட செயலா் எஸ்.எம்.தமீம் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com