முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் காரைக்கால் தெற்கு தொகுதி செயலாளா் க. கலைவாணன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை பட்டவா்த்தி பகுதியில் அம்பேத்கா் நினைவு தினதன்று, அம்பேத்கா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மீது தாக்குதல் நடத்தியோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மழை பாதிப்புக்காக புதுவை அரசு அறிவித்த ரூ. 5 ஆயிரம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சுகாதார சீா்க்கேடுகளுடன் காணப்படும் காரைக்கால் பழைய பேருந்து நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு, அந்த இடத்தை தூய்மைப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் புதுவை மாநில அரசியல் குழு செயலாளா் அரசு.வணங்காமுடி, துணை செயலாளா் பொன்.செந்தமிழ்ச்செல்வன், தொகுதி செயலாளா்கள் சு.விடுதலைக் கனல், வல்லவன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.