காரைக்காலில் 8 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 453 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோட்டுச்சேரி 3, திருநள்ளாறு 3, காரைக்கால் நகரம் 2 என 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,44,664 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,835 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,540 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,21,515 பேருக்கும், 2-ஆவது தவணையாக 83,593 பேருக்கும் என 2,05,108 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com